விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஏஆர்) தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் ‘கிரிதக்யா’ வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி(ஹேக்கத்தான்)
प्रविष्टि तिथि:
23 SEP 2020 12:34PM by PIB Chennai
பெண்களுக்கு உதவியாக இருக்கும் உபகரணங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பண்ணை இயந்திரமயமாக்கலை மேம்படுத்துவதற்கு சாத்தியமான தொழில்நுட்ப தீர்வுகளை மேம்படுத்துவதற்காக, ‘‘கிரிதக்யா’’ என்ற பெயரில் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டிக்கு தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் / தொழில்நுட்ப கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கண்டுபிடிப்பளர்கள்/தொழில்முனைவோர்கள் இந்த வேளாண் தொழில்நுட்ப போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
புதிய பண்ணை இயந்திரம் கண்டுபிடிக்கும் போட்டியில் அதிகபட்சம் 4 பேர் இருக்கலாம், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர்/ தொழில்முனைவோர் ஒருவருக்கு மேல் இருக்க கூடாது என ஐசிஏஆர் தலைமை இயக்குனர் டாக்டர். திரிலோசன் மொகபத்ரா கூறியுள்ளார். இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், உள்ளூர் தொடக்க நிறுவனங்கள், தொழில்நுட்ப கழக மாணவர்களுடன் இணைந்து செயல்படலாம். சிறந்த பண்ணை இயந்திரம் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-வது பரிசாக ரூ.3 லட்சம், 3-வது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதற்கான பதிவு கடந்த 15ம் தேதியே தொடங்கிவிட்டது.
ஐசிஏஆர் துணை தலைமை இயக்குனர் டாக்டர் ஆர்.சி.அக்ராவல் கூறுகையில், ‘‘மாணவர்கள், பேராசிரியர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர்கள் தங்களின் கண்டுபிடிப்பு அணுகுமுறையையும், நாட்டின் பண்ணை இயந்திரங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப தீர்வுகளையும் வெளிக்காட்ட இந்த போட்டி ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறினார்.
இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கும், இதர விவரங்களை அறிவதற்கும் கீழ்கண்ட இணையதள முகவரியை கிளிக் செய்யவும்: https://nahep.icar.gov.in/Kritagya.aspx
பிரதமரின் தொலைநோக்கை முன்னெடுத்து செல்லும் வகையில், பண்ணை இயந்திரமயமாக்கலில் புதியதை கண்டுபிடிப்பதற்காக, இந்திய வோளாண் ஆராய்ச்சிகவுன்சில், ‘கிரிதக்யா- வேளாண்-தொழில்நுட்ப ஹேக்கத்தான் நிகழ்ச்சியை நடத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658055
------
(रिलीज़ आईडी: 1658130)
आगंतुक पटल : 270