அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்து அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக் கொள்கை (STIP 2020) குறித்த விவாதத்தில் நிபுணர்கள் ஆலோசனை

Posted On: 22 SEP 2020 1:46PM by PIB Chennai

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்து சமீபத்தில் நடந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக் கொள்கை (STIP 2020) குறித்த விவாதத்தில்  ஆலோசிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். 

 

இந்த விவாதத்துக்கு தலைமை தாங்கிய டாக்டர் . விஜய் பட்கர், தலைவர், விபா (விஞ்ஞான பாரதி) கூறுகையில், ‘‘பெண்கள் தங்களின் பங்களிப்பை அளிக்கும்போதுதான், நிலைத்தன்மை மற்றும் தற்சார்பு இந்தியா சாத்தியமாகும்’’ என்றார். பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படாதது,  வயது தடை பிரச்சினைகள், பெண்கள் தலைமையிலான புது தொடக்கங்களுக்கு நிதி, தலைமை, பாலின  பாகுபாடு மற்றும் பெண்கள் தொழில்முனைவோரின் தேவை, அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட  அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சூழல்,  குடும்பம் மற்றும் பெற்றோருக்குரிய பராமரிப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக் கொள்கை 2020 தலைவர் டாக்டர் அகிலேஷ் குப்தா,  பேசுகையில், கல்வித்துறையில் பெண்களுக்கு கட்டாய பதவி, 30% பிரதிநிதித்துவம், ஆராய்ச்சி மற்றும் நிர்வாகத்தில் மூத்த பெண் விஞ்ஞானிகளுக்கு தலைமை பதவி ஆகியவை குறித்து விளக்கினார்.

 

இந்த ஆலோசனை நிகழ்ச்சிக்கு விஞ்ஞான பாரதி அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. பெண் தொழில் முனைவோர்களுக்கு ஆதரவு, பெண்கள் தலைமையிலான பொருளாதாரம் ஆகியவை குறித்து நிபுணர்கள் பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657670



(Release ID: 1658053) Visitor Counter : 271