வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

2018-19 மற்றும் 2019-20-இல் கட்டுபடியாகக்கூடிய விலையிலான வீடுகளுக்கான நிதியின் கீழ் ரூ 12,583 கோடி பயன்படுத்தப்பட்டது; பிரதமரின் சுவ நிதி திட்டத்திற்காக ரூ 600 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 21 SEP 2020 3:49PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் கட்டுபடியாகக்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கான நிதியின் கீழ் ரூ 12,583 கோடி பயன்படுத்தப்பட்டது.

குறைந்த வருவாய் பிரிவினரின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேசிய வீட்டுவசதி வங்கியில் ரூபாய் 10 ஆயிரம் கோடி மூலதன நிதியோடு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிதி மூலம் தொடக்க கடன் நிறுவனங்களுக்கு மறு கடன் வசதி அளிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 45,304 பேர் பயனடைந்துள்ளனர்.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மறுசீரமைப்பதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் சுவ நிதி  திட்டத்திற்காக ரூ 600 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு வருடத்துக்குள் திரும்ப செலுத்தும் காலக்கெடுவுடன் பிணை இல்லா கடனாக தலா ரூபாய் 10,000 பணி மூலதன நிதியாக இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

************


(रिलीज़ आईडी: 1657408) आगंतुक पटल : 258
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Manipuri , Bengali , Punjabi , Malayalam