சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்து இன்னுமொரு சிகரத்தை இந்தியா தொட்டது

Posted On: 20 SEP 2020 11:01AM by PIB Chennai

கொரோனாவை எதிர்த்து இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இது வரை இல்லாத அளவில் புதிய சாதனையாக நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் (12,06,806)

அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.

 

மொத்த கொவிட்-19 பரிசோதனைகள் 6.36  கோடியை (6,36,61,060) தாண்டி உள்ளன. கொவிட்-19 பரிசோதனை உள்கட்டமைப்பு நாட்டில் மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதை இது தெளிவாக காட்டுகிறது.

 

ஏப்ரல் 8 அன்று ஒரு நாளைக்கு வெறும் பத்தாயிரம் பரிசோதனைகளை மட்டுமே நாடு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இது 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் மட்டுமே ஒரு கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

 

அதிக அளவிலான பரிசோதனைகள் பாதிப்புகளை விரைவில் கண்டறியவும், சரியான நேரத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழிவகுக்கிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1656895


(Release ID: 1656899)