குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் உறுதி பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றை 160 போலி காதி பொருட்களை ஆன்லைனில் இருந்து நீக்க வைத்துள்ளது
Posted On:
19 SEP 2020 2:26PM by PIB Chennai
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் உறுதி, பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றை 160 போலி காதி பொருட்களை ஆன்லைனில் இருந்து நீக்க வைத்துள்ளது.
காதி என்னும் வணிகப் பெயரில் விற்கப்பட்டு வந்த 160 பொருட்களின் இணைய இணைப்புகள் இந்த மின் வணிக தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், காதி இந்தியா என்னும் பெயரில் பொருட்களை விற்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காதி முகக் கவசங்கள், மூலிகை சோப்புகள், ரவிக்கைகள், குர்தா போன்ற பொருட்கள் இந்த வணிக பெயரில் மின் வணிக தளங்களில் விற்கப்பட்டு வந்தன.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1656628
MBS/GB
(Release ID: 1656659)
Visitor Counter : 281