சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக நோயாளி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சகம் கருத்தரங்கு நடத்தியது
Posted On:
17 SEP 2020 7:35PM by PIB Chennai
இரண்டாம் உலக ‘நோயாளி பாதுகாப்பு தினத்தை’ முன்னிட்டு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார அமைப்பு வள மையம் இனைந்து இணைய கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கோடு இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
“சுகாதார பணியாளர் பாதுகாப்பு: நோயாளி பாதுகாப்புக்கு முன்னுரிமை” என்ற கருப்பொருளை கொண்டு இந்த ஆண்டின் நோயாளி பாதுகாப்பு தினம் அனுசரிக்கடுப்படுகிறது. இந்த ஆண்டின் கொண்டாட்டத்தின் கொள்கை முழக்கம் “பாதுகாப்பான சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பான நோயாளிகள்” என்பதாகும்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயளர் திரு. ராஜேஷ் பூஷண் இந்த இணைய கருத்தரங்கை தொடங்கிவைத்தார். அவர் தனது தொடக்க உரையில், மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைளை வலியுறுத்தினார். தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகமூடிகள் கிடைப்பதை உறுதி செய்தல். ரூ. 50.0 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை, இயக்கத்தில் உள்ள உதவி எண், கீமோப்ரோபிளக்ஸிஸ் குறித்த அறிவுரைகள் போன்றவை அரசு எடுத்துள்ள நடவடிக்கைளில் சிலவாகும். வெளிப்படையான "அறிக்கையிடல் மற்றும் கற்றல் முறையை" மேற்கொள்வதின் முக்கியத்துவத்தையும் சுகாதார செயளர் எடுத்துரைத்தார்.
(Release ID: 1656069)
Visitor Counter : 270