சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

Dr. Harsh Vardhan addresses Joint G20 Finance and Health Ministers Meeting

Posted On: 17 SEP 2020 7:05PM by PIB Chennai

ஜி20 நாடுகளின் நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்  இன்று காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கி நடத்தியது.

 

கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், மேம்பட்ட பெருந்தொற்று தயார்நிலைக்காக செயல்மிகு சுகாதார அமைப்புகள் உருவாக்கப்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

பொது சுகாதாரத்தில் முதலீடு செய்வது அவசியம் என்றும் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இது ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் தெரிவித்தார்.

 

"இந்தியா தொடர்ந்து தரமான பொருட்களை தயாரித்து உலகத்துக்கு வழங்கும். கொவிட்-19 கண்டறிதல், மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கான அணுகுதல் அனைவருக்கும் நியாயமான முறையில் கிடைக்க வேண்டும்," என்று திரு ஹர்ஷ் வர்தன் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1655772


(Release ID: 1655801) Visitor Counter : 172