பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினருக்கு பல திட்டங்களின் கீழ் உதவி: மாநிலங்களவையில் பழங்குடியினத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தகவல்

Posted On: 17 SEP 2020 4:11PM by PIB Chennai

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சாருதா ஆகியோர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கொவிட்-19 தொற்றுக்கு பின்பு, பொருளாதார வளர்ச்சியை மீட்பதற்கான திட்டம் வகுக்க பழங்குடியினத்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்தது. எங்கள் வேண்டுகோளை ஏற்று, முடக்க காலத்தில் வனப்பொருட்களை சேகரிப்பதற்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியது. வனப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் மாற்றியமைத்தது. 23 புதிய வன உற்பத்தி பொருட்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் வன சேகரிப்பு பொருட்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

வன உற்பத்தி பொருட்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

பழங்குடியினருக்கான  நலத்திட்டங்களுக்கு, பழங்குடியினர் துணை திட்ட நிதியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

இதன் மூலம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சமூதாய சமயற்கூடங்கள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள், அடிப்படை நிதியுதவி ஆகியவை உறுதி செய்யப்பட்டன.

பழங்குடியினர் கிராமங்களில் காய்கறி விவசாயத்துக்கு நீர்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

ஆடு, காளான், தேனி வளர்ப்பு வசதிகள் செய்தி கொடுக்கப்பட்டன. மீன் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

வங்கி கடன் உதவியுடன் சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்பட்டன.  பழங்குடியின பகுதிகளில் தனிமைபடுத்தல் மையங்கள் அமைத்து கொடுக்கப்பட்டன.

பழங்குடியினர் மேம்பாட்டுக்கு, 40 மத்திய அமைச்சகம்/ துறைகள் 4.3% முதல் 17.5% வரை  நிதி ஒதுக்க கட்டாயப்படுத்தப்பட்டன.

பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் பழங்குடியினர் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் சுட்டிக் காட்டப்பட்டன.

 

பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களின் கீழ் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. 9 வகுப்பு முதல் மேல் படிப்பு படிக்கம் மாணவர்களுக்கு தனி தனி பிரிவுகளில்  கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றன. 

 

மத்தியப் பிரதேசம் பர்வானின் பகுதியில் பழங்குடியின கலைஞர்களுக்கு  ‘பாக்’   என்ற அச்சுப் பயிற்சியை பத்மஸ்ரீ விருது பெற்ற யூசப் கத்ரி வழங்கி வருகிறார். இதன் மூலம் அப்பகுதி பழங்குடியினர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.


(Release ID: 1655749) Visitor Counter : 325