தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952-இன் கீழ் வழக்குகளின் மெய்நிகர் விசாரணையின் தொடக்கம் விரைவான மற்றும் கட்டுபடியாகக்கூடிய நீதிமன்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது
Posted On:
14 SEP 2020 4:30PM by PIB Chennai
பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952-இன் கீழ் வழக்குகளின் மெய்நிகர் விசாரணையின் தொடக்கம் விரைவான மற்றும் கட்டுபடியாகக்கூடிய நீதிமன்ற செயல்பாடுகளுக்கான புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
செயல்பாடுகளை எளிதாக்குவதற்கான வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியான இது, 2020 செப்டம்பர் 09 அன்று வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர்கள் குழுவின் 227வது கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு சந்தோஷ் குமார் கங்க்வாரால் மெய்நிகர் முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்றின் பரவலால் சமூக இடைவெளி விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டி உள்ளதால், பல்வேறு மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் மெய்நிகர் விசாரணைகள் நடைபெறுகின்றன. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள விதிமுறைகளின் படி இது செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952-இன் கீழ் வரும் வழக்குகளும் மெய்நிகர் முறையில் விசாரணை செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654049
**********
(Release ID: 1654375)
Visitor Counter : 337