திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

பயிற்சி காலத்துக்கான உதவித்தொகை

Posted On: 14 SEP 2020 2:29PM by PIB Chennai

அனைத்து வகையான பயிற்சிகளுக்குமான குறைந்தபட்ச உதவித்தொகை உயர்த்தப்பட்டு, 2019 செப்டம்பர் 25-ஆம் தேதியிட்ட அரசிதழில் அசாதாரண அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதியின் அடிப்படையில் குறைந்த பட்ச உதவித் தொகை நிர்ணயிக்கப்படும்.

செப்டம்பர் 2019-இல் மாற்றி அமைக்கப்பட்ட விதிகளின் படி குறைந்தபட்ச உதவித் தொகையில் இருந்து பயிற்சியின் இரண்டாம் ஆண்டில் 10 சதவீதமும் மூன்றாம் ஆண்டில் 15 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த தகவல்களை மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் திரு ஆர்கே சிங் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இன்று அளித்தார்.

இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653982

 

***(Release ID: 1654086) Visitor Counter : 168