திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் இந்தியா இயக்கத்தின் இலக்கு

प्रविष्टि तिथि: 14 SEP 2020 2:32PM by PIB Chennai

தேசிய திறன் மேம்படுத்துதல் இயக்கம் மாண்புமிகு பிரதமரால் 2015 ஜூலை 15 அன்று தொடங்கப்பட்டது. வலிமையான நிறுவன கட்டமைப்பை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கும், திறன் வளர்த்தல் முயற்சிகளை அதிகரிப்பதற்கும், ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் இது தொடங்கப்பட்டது.

 

குறுகியகால பயிற்சிக்காக பிரதமர் கவுஷல் விகாஸ் யோஜனா மற்றும் ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான் என்னும் இரண்டு திட்டங்களை திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் செயல்படுத்துகிறது.

 

நீண்ட காலப் பயிற்சிகள் தொழில் பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகின்றன. தொழில் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-இல் 11964 ஆக இருந்த நிலையில், 2018-19-இல் 14939 ஆக உயர்ந்தது.

 

மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் 16.90 லட்சத்தில் இருந்து 23.08 லட்சமாக உயர்ந்துள்ளது.

 

இதைப்பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் திரு ஆர்கே சிங் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இன்று அளித்தார்.

 

அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653977

***


(रिलीज़ आईडी: 1654079) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Assamese , Manipuri , Punjabi , Telugu