தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கொவிட் தொற்று காலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 94.41 லட்சம் பேருக்கு ரூ.35,445 கோடி வழங்கியுள்ளது இபிஎப்ஓ
Posted On:
08 SEP 2020 3:39PM by PIB Chennai
கொவிட்-19 தொற்று கட்டுபாடுகளுக்கு இடையே 94.41 லட்சம் பணியாளர்களுக்கு ரூ.35,445 கோடி பணத்தை இபிஎப்ஓ வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில், பணியாளர்கள் கொவிட்-19 முன்பணம் பெற்றுக் கொள்ளும் வசதியை இபிஎப்ஓ அறிமுகம் செய்தது. பலர் உடல்நிலை பாதிப்புக்கான உரிமைகளையும் கோரி விண்ணப்பம் செய்தனர். கொவிட்-19 தொற்று கட்டுபாடுகளுக்கு இடையேயும், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 94.41 லட்சம் பேரின் விண்ணப்பங்களை ஏற்று ரூ.35,445 கோடி நிதியை உறுப்பினர்களுக்கு இபிஎப்ஓ வழங்கியுள்ளது.
இது இதே ஆண்டு கடந்த காலத்தில் விண்ணப்பித்தவர்களை விட 32% அதிகம், வழங்கப்பட்ட தொகையும் 13% அதிகம்.
கொரோனா நெருக்கடியில் உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக, இபிஎப்ஓ விரைந்து செயல்பட்டு கொவிட்-19 முன்பணம் மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணங்களுக்கான பணத்தை வழங்கியுள்ளது. கொவிட்-19 முன்பணம் மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணங்களுக்கான விண்ணப்பங்களில் பெரும்பாலனவற்றுக்கு 3 நாளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கொவிட்-19 முன்பணம் கோரிக்கை மனுக்களில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 55 % சதவீதம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு விட்டது. உடல்நிலை பாதிப்பு காரணங்களை அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 31 % வீதம் பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம் அடிப்படையில் ரூ.15,000-க்கும் கீழ் பெறும் உறுப்பினர்களின் கோரிக்கைகளில் 75% பேருக்கு கொவிட்-19 முன்பணம் வழங்கப்பட்டது. உடல்நிலை பாதிப்பு காரணங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் 79 % பேருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652291
****************
(Release ID: 1653945)
Visitor Counter : 171