சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க கடும் சட்டங்களை அமல்படுத்துமாறு மாநிலங்களை திரு பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டார்
प्रविष्टि तिथि:
11 SEP 2020 8:09PM by PIB Chennai
பதினைந்தாவது தேசிய வன தியாகிகள் தினத்தன்று, நெருப்பு, கடத்தல்காரார்கள் மற்றும் சட்ட விரோத கும்பல்களில் இருந்து நமது இயற்கை வளங்களை காக்கும் பணியில் தமது இன்னுயிரை ஈந்தவர்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு திரு பிரகாஷ் ஜவடேகர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க கடும் சட்டங்களை அமல்படுத்தி, இச்செயல்களில் ஈடுபடுவோர் மிது நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.
மணல் கடத்தல் கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர், இயற்கை வளங்களை சுரண்டுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார். பல மாநிலங்கள் இந்த விஷயத்தில் விதிகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
மணல் கடத்தல் ஆறுகளை சேதப்படுத்துவதாகவும், நாட்டின் இயற்கை வளத்தை சுரண்டுவதாகவும் அவர் கூறினார். இயற்கை வளங்களைப் பாதுகாக்க பாடுபடுவோர் போற்றப்பட வேண்டியவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653438
(रिलीज़ आईडी: 1653584)
आगंतुक पटल : 213