சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தொற்று பரவலை தடுக்க தீவிரமாக செயல்படும்படி வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 11 SEP 2020 7:30PM by PIB Chennai

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும், கொவிட் மேலாண்மை உத்திகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த கூட்டத்தில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநில முதன்மை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். 
நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 5% -க்கும் குறைவானோர்  இந்த 8 மாநிலங்களில் உள்ளனர். 

கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், மருத்துமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார். 8 மாநிலங்களில் தற்போதைய  கொவிட் நிலவரம் குறித்து அந்த மாநில செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் விளக்கினர். 
இங்கு தொற்று பரவலை கட்டுப்படுத்த, கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், சமூக இடைவெளி முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1653403


(Release ID: 1653440)