தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

சண்டிகரில் தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்வர்

Posted On: 11 SEP 2020 6:14PM by PIB Chennai

சண்டிகரில் தொழிலாளர் நலத்துறையின் புதிய கட்டிடத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு.சந்தோஷ் குமார் கங்வர் இன்று திறந்து வைத்தார் .  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திரு.ஹீராலால் சமர்யா, தொழிலாளர் பணியக தலைமை இயக்குனர் டிபிஎஸ் நெஹி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு.சந்தோஷ் குமார் கங்வர், தொழிலாளர்களின் அனைத்து அம்சங்கள் பற்றிய தகவல்களும் முக்கியமானவை என்றும், கொள்கைகள் உருவாக்க இவை உதவுகின்றன என்றார்.  தொழிலாளர் பற்றிய புள்ளி விவரங்களுக்காக, பிரத்யேகமாக செயல்படும் தொழிலாளர் பணியகம் போன்ற அமைப்பு அவசியம் எனவும் அவர் கூறினார்.

இந்தியா  தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு என்றும், வரும்  காலங்களில் அவர்களை பற்றி தகவல்களின்  முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், தொழிலாளர் பணியகம் போன்ற புள்ளிவிவரங்களுக்கான ஒரு பிரத்யேக அமைப்பின்  செயல்பாடு வலுவடைகிறது என்றும் அமைச்சர் திரு. திரு.சந்தோஷ் குமார் கங்வர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1653381


(Release ID: 1653435) Visitor Counter : 120