பாதுகாப்பு அமைச்சகம்
தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தின் பெருநிறுவனமாக்குதல்: பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் அதிகாரம் பொருந்திய அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்தது
प्रविष्टि तिथि:
11 SEP 2020 5:55PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை அலுவலகமாக இயங்கும் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட 100% அரசுக்கு சொந்தமான பெருநிறுவனமாக அரசு எடுத்துள்ள முடிவினைத் தொடர்ந்து, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் அதிகாரம் பொருந்திய அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்துள்ளது.
உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்க்வார் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் துறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பெருநிறுவனமாக மாறும்போது அளிக்கப்பட வேண்டிய ஆதரவு, பணியாளர்களின் நலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த அம்சங்களையும் இந்த குழு கருத்தில் கொண்டு கண்காணித்து, வழிகாட்டும்.
தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தின் (OFB) பெருநிறுவனமாக்குதல் குறித்து பணியாளர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின் கவலைகளைப் போக்குவதற்காக அவர்களுடனான பேச்சுவார்த்தையை பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு சமீபத்தில் நடத்தியது. தன்னாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் தளவாடங்கள் விநியோகத்தின் செயல்திறன் ஆகியவற்றை பெருநிறுவனமாக்குதல் மேம்படுத்தும் என்று கூறிய, மே 16, 2020 அன்று அரசால் அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியே இதுவாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653374
(रिलीज़ आईडी: 1653430)
आगंतुक पटल : 298