குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை புதுப்பிக்க குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 11 SEP 2020 1:30PM by PIB Chennai

நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.  நல்ல ஆரோக்கியத்துக்கும், மனஅழுத்தம் அற்ற வாழ்க்கைக்கும், மக்களின் அன்றாட வாழக்கையில் விளையாட்டு அல்லது யோகா அல்லது ஏதாவது உடற்பயிற்சி ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என அவர்  கூறினார். 
இந்தாண்டில் விளையாட்டு துறையில், பஞ்சாப் பல்கலைக்கழகம், மவுலான அப்துல் கலாம் ஆசாத் கோப்பையை  2வது முறையாக பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய திரு. வெங்கையா நாயுடு, விளையாட்டுகளை பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியறுத்தினார். 
மாணவர்கள் வகுப்பறையில் பாதி நேரத்தையும், மீத பாதி நேரத்தையும் களத்திலும் செலவழிக்க வேண்டும். களம் என்றால் விளையாட்டு மைதானம், விவசாய நிலம், சமூக களம் என அவர் கூறினார். 

விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, திட்டமிடல் மற்றும் உறுதி ஆகியவற்றால்தான் விளையாட்டில் சிறந்து விளங்க முடியும் என கூறிய திரு. வெங்கையா நாயுடு, கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உடற் பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார். 
பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிய உடல் தகுதி இந்தியா பிரசாரம் , மக்களை உடல் தகுதியுடன் இருக்க ஊக்குவிக்கும் என அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653281



(Release ID: 1653339) Visitor Counter : 138