கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கடல்சார் பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் ‘சரோத்-துறைமுகங்கள்’ அமைப்பு: மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தொடக்கம்

Posted On: 10 SEP 2020 3:13PM by PIB Chennai

கடல்சார் பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் ‘சரோத் -துறைமுகங்கள் அமைப்பை மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர்  திரு.மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தில்லியில் இன்று தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு.மன்சுக் மாண்டவியா, சரோத்-துறைமுகங்கள் அமைப்பு திருப்பு முனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் துறைமுக துறையில் நம்பிக்கையையும், நீதியையும் நிலைநாட்டும் என குறிப்பிட்டார். பிரச்னைகளை  சரோத்-துறைமுகங்கள் நியாயமாக தீர்க்கும் என்பதால், நேரமும், பணமும் மிச்சம் என்றார். 
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக செயலாளர் டாக்டர் சங்சீவ் ரஞ்சன் பேசுகையில், வரும் நாட்களில் அனைத்து துறைமுகங்களும் பஞ்சாயத்து முறையை நோக்கி மாறும் என குறிப்பிட்டார். சரோத்-துறைமுகங்கள் அனைத்து தரப்பினர் இடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652979(Release ID: 1653097) Visitor Counter : 42