சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பீகாரில் ரூபாய் 971 கோடி மதிப்புடைய தேசிய நெடுஞ்சாலைக்கு திரு கட்கரி ஒப்புதல் அளித்தார்
Posted On:
10 SEP 2020 3:35PM by PIB Chennai
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, பீகாரில் ரூபாய் 971 கோடி மதிப்புடைய முங்கா்-பாகல்பூர்
தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
120 கிலோ மீட்டர் நீளத்தில் அமையப்போகும் இந்த கான்கிரீட் சாலை, இரண்டு வழிகளை கொண்டதாக இருக்கும். சில இடங்களில் நான்கு வழி போக்குவரத்துக்கும் வசதி இருக்கும்.
இந்த சாலைக்கான பணிகளை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்குமாறு அதிகாரிகளை திரு கட்கரி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பகுதியில் உடனடி செப்பனிடும் பணிகளுக்காக ரூபாய் 20 கோடிக்கு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652990
(Release ID: 1653096)
Visitor Counter : 134