ஆயுஷ்

ஊட்டச்சத்து மாதத்தில் ஆயுஷ் சார்ந்த ஊட்டச்சத்து தீர்வுகள் பிரபலப்படுத்தப்படும்

Posted On: 10 SEP 2020 3:35PM by PIB Chennai

செப்டம்பரில் கொண்டாடப்படும் ஊட்டச்சத்து மாதத்தில், பாரம்பரிய ஆரோக்கிய ஞானத்தின் அடிப்படையிலான ஊட்டச்சத்து தீர்வுகள் முக்கிய பங்கு வகிக்கும்.

கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் இந்தக் கொண்டாட்டங்களில், ஆயுஷ் சார்ந்த ஊட்டச்சத்து தீர்வுகள் பிரபலப்படுத்தப்படும்.

பிரதமரால் 2018-இல் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டம், நாட்டிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை விரட்டுவதில் சிறப்பான பணியை செய்கிறது.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வது இதன் முன்னுரிமை ஆகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து, கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தேசிய அளவில் இதைக் கொண்டாடுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் 


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652991


(Release ID: 1653095) Visitor Counter : 190