எரிசக்தி அமைச்சகம்
ராய்கார்-புகலூர் உயர் அழுத்த நேரடி மின்சார முதல் அலகு வர்த்தக செயல்பாட்டுக்கு வந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2020 1:06PM by PIB Chennai
1500 மெகாவாட் திறனுள்ள ராய்கார்-புகலூர் உயர் அழுத்த நேரடி மின்சார பகிர்மான திட்டத்தின் முதல் அலகு வர்த்தக செயல்பாட்டுக்கு வந்ததாக பவர்கிரிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள ராய்காரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள புகலூர் வரை 1,765 கிலோமீட்டர்களுக்கு மின்சாரத்தை எடுத்து செல்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பொரேஷன், இந்த அமைப்பின் மூலம் 1500 மெகாவாட் மின்சாரம் மேற்கு பிராந்தியத்தில் இருந்து தெற்குக்கு நம்பகமான மற்றும் தரமான முறையில் கொண்டு வரப்படும் என்று செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652545
(வெளியீட்டு அடையாள எண்: 1652776)
வருகையாளர் எண்ணிக்கை : 184