சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அனைத்து திட்டங்களுக்கான செயல்திட்டம் 2020-21-ஐ திரு தாவர்சந்த் கெலோட் வெளியிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2020 1:57PM by PIB Chennai

2020-21-ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அனைத்து திட்டங்களுக்கான 33 செயல்திட்டங்களை அடங்கிய புத்தகம் ஒன்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் 2020 செப்டம்பர் 7 அன்று வெளியிட்டார்.

மத்திய அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை எட்டுவதற்காக விரிவான செயல் திட்டம் ஒன்றை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

நிகழ்ச்சியில் பேசிய கெலோட், ஒருங்கிணைந்த சமூகம் என்னும் லட்சியத்தை எட்டுவதற்காக இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், கல்வி, பொருளாதாரம், சமுக வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு திட்டங்களின் மூலம் 2020-21-ஆம் ஆண்டில் ஏழைகளுக்கும், விளிம்பு நிலை மனிதர்களுக்கும் அதிகாரமளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

2019-20-ஆம் நிதி ஆண்டில், பல்வேறு திட்டங்களின் கீழ் செலவிடப்பட்ட தொகை ரூ 8602.53 கோடியாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 2.35 கோடியாகவும் இருந்தன என்று தெரிவித்த அமைச்சர், இந்த வருடம் இவை ரூ 9933.33 கோடியாகவும் (15.46% உயர்வு), 4.91 கோடி பயனாளிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652545


(வெளியீட்டு அடையாள எண்: 1652774) வருகையாளர் எண்ணிக்கை : 292
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi