புவி அறிவியல் அமைச்சகம்

வானிலை அறிக்கை

Posted On: 08 SEP 2020 10:35AM by PIB Chennai

ஆகஸ்ட் மாதத்தில், வடக்கு வங்கக்கடலில் ஐந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருந்தன என்றும் அந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 27 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகின என்றும் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  ஆகஸ்ட் மாதத்தில், வழக்கமான மழை பொழிவை விட, 27 சதம் அதிக மழை இருந்தது.  ஒடிசா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அடுத்த நான்கு நாட்களுக்கு கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பரவலாக பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652200

***************



(Release ID: 1652222) Visitor Counter : 125