நித்தி ஆயோக்

சர்வதேசப் பன்முக ஏழ்மை குறியீடு மற்றும் இந்தியாவைப் பற்றிய செய்தி குறிப்பு

Posted On: 07 SEP 2020 4:07PM by PIB Chennai

சீர்திருத்தங்களை செம்மையாக செய்வதற்காக சர்வதேசப் பன்முக ஏழ்மை குறியீட்டு கண்காணிப்பு செயல்முறையை கையாளும் பொறுப்பு நிதி ஆயோக்கிடம் வழங்கப்பட்டுள்ளது.

 

சர்வதேசப் பன்முக ஏழ்மை குறியீடு என்பது 29 தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச குறியீடுகளின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கான இந்திய அரசின் முடிவின் ஒரு பகுதியாகும்.

 

2010-இல் ஆக்ஸ்போர்டு ஏழ்மை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியால் (ஓபிஎச்ஐ) முதல்முறையாக உருவாக்கப்பட்ட சர்வதேசப் பன்முக ஏழ்மை குறியீடு, உலகின் 107 வளரும் நாடுகளில் உள்ள பன்முக ஏழ்மையை குறிப்பிடும் உலகளாவிய நடவடிக்கையாகும்.

 

ஊட்டச்சத்து, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி செல்லும் ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடி தண்ணீர், மின்சாரம், வீட்டுவசதி மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் ஆகிய 10 அம்சங்களைப் பற்றி கணக்கெடுக்கப்படும் ஒவ்வொரு வீடும் மதிப்பிடப்படுகிறது.

 

பல்நோக்கு ஏழ்மை குறியீட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நிதி ஆயோக் அமைத்துள்ளது. திருமிகு சன்யுக்தா சமட்டார் தலைமையிலான இந்தக் குழுவில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651981


***********



(Release ID: 1652024) Visitor Counter : 324