வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மாநில வணிகச் சீர்திருத்த செயல் திட்டம் 2019 அமல்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மாநிலத் தரவரிசை வெளியீடு
प्रविष्टि तिथि:
05 SEP 2020 5:53PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மாநில வணிக சீர்திருத்தச் செயல் திட்டம் 2019 அமல்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மாநிலத் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டார்.
மாநில வணிக சீர்திருத்தச் செயல் திட்டத்தின் கீழ் 2019 -இல் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களாக ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா விளங்குகின்றன.
ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல், வர்த்தகம், தொழில்கள் இணை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், திரு ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
தரவரிசைக்காக மாநில வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டத்தை அமல்படுத்துதலில் உயர்ந்த தரங்களைப் பராமரித்ததற்காகவும், மற்றும் தரவரிசைகளின் அளவீடுகளை மேம்படுத்தியற்காகவும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையை நான் வாழ்த்துகிறேன் என்று நிதியமைச்சர் கூறினார்.
இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல், மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். மாநிலங்களின் தரவரிசை முறையைக் கொண்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இது நாட்டின் தரவரிசையை மேம்படுத்த உதவும் என்று திரு பியுஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651598
(रिलीज़ आईडी: 1651922)
आगंतुक पटल : 373