அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒளி மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொடர்பு ஒளியியல் கருவிகளுக்கு வலுவூட்டும்

Posted On: 06 SEP 2020 5:41PM by PIB Chennai

மாற்றக்கூடிய மற்றும் திறன்மிகு ஒளியியல் கருவிகளைத் தயாரிப்பதில் உதவக்கூடிய புதுமையான தொடர்பை- முப்பரிமாண மற்றும் ஒற்றைப் பரிமாண ஃபோட்டானிக் அமைப்பை தலைகீழாக மாற்றக்கூடிய புற ஊதா மற்றும் நீல ஒளிச் சேர்க்கையை- பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான நானோ மற்றும் மென் பொருள்கள் அறிவியல் மையத்தில் (CeNS) இதைக் கண்டறிந்துள்ளனர்.

 

ஒளி மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தொடர்பு, ஒளியியல் கருவிகளுக்கு வலுவூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ராஜலட்சுமி சாஹூ, டி. எஸ். சங்கர் ராவ், யு. எஸ். ஹிரெமத், சி. வி. யெலமக்கட் மற்றும் எஸ் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் அடங்கிய நானோ மற்றும் மென் பொருள்கள் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சிக் குழு இதை கண்டறிந்துள்ளது. இதை பற்றிய தகவல்கள் 'ஜர்னல் ஆப் பிசிக்கல் கெமிஸ்ட்ரி' என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651809

 



(Release ID: 1651875) Visitor Counter : 159