அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான முறையை JNCASR ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்
प्रविष्टि तिथि:
06 SEP 2020 5:48PM by PIB Chennai
உலகின் அதிகப் புற்றுநோய் மரணங்களுக்குக் காரணமான நுரையீரல் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிவது கடினம் என்பதால், சிகிச்சை அளிப்பதும் கடினமாகி விடுகிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவதற்கான முறையை உருவாக்கியுள்ளனர்.
பேராசிரியர் டி கோவிந்தராஜூ தலைமையிலான குழு கண்டறிந்துள்ள இந்த முறையின் மூலம், நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடிய மருந்துகளை உருவாக்கலாம் என்று தெரிய வருகிறது. இதற்கான காப்புரிமை விண்ணப்பம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651811
(रिलीज़ आईडी: 1651874)
आगंतुक पटल : 217