விண்வெளித்துறை
சந்திராயன்-1 அனுப்பிவைத்த படங்கள் நிலவில் பூமியின் வளிமண்டல பாதிப்பின் சாத்தியத்தைக் குறிக்கின்றன
प्रविष्टि तिथि:
06 SEP 2020 6:12PM by PIB Chennai
மத்திய வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், சந்திராயன்-1 அனுப்பி வைத்த படங்கள் நிலவில் பூமியின் வளிமண்டல பாதிப்பின் சாத்தியத்தைக் குறிக்கின்றன என்று இன்று கூறினார்.
நிலவின் துருவங்களில் ‘துரு’ பிடித்திருக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திராயன்-1 அனுப்பியுள்ள படங்கள் காட்டுகின்றன என அவர் தெரிவித்தார்.
நிலவின் மேற்பரப்பில் இரும்பு பாறைகள் இருந்தாலும், துரு பிடிப்பதற்குத் தேவையான தண்ணீரும், பிராணவாயுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று இந்த கண்டறிதல் குறிப்பதாக அவர் தெரிவித்தார்.
சந்திராயன்-3-ஐ பொருத்தவரையில், 2021-இன் தொடக்கத்தில் அது ஏவப்படலாம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யானுக்கான தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651819
(रिलीज़ आईडी: 1651871)
आगंतुक पटल : 310