சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 சிறந்த நடவடிக்கைகள்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில கோவிட் இணையதளத்தை உத்திரப்பிரதேசம் அமைத்துள்ளது

प्रविष्टि तिथि: 06 SEP 2020 4:01PM by PIB Chennai

பெருந்தொற்று இந்தியாவுக்குள் நுழைந்து ஒன்பது மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கோவிட்டுக்கான எதிர்ப்பு மற்றும் மேலாண்மை யுக்திகளை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

 

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சிறப்பான கண்டறிதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச அரசு எடுத்து வருகிறது.

 

அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவிட் கட்டுப்பாடு மையங்களை உத்திரப் பிரதேச அரசு அமைத்துள்ளது. அரசுத் துறைகளுக்கிடையே சிறப்பான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

http://upcovid19tracks.in என்னும் ஒருங்கிணைந்த மாநில கோவிட் தளத்தையும் உத்திரப்பிரதேச அரசு உருவாக்கியுள்ளது. கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சை சார்ந்த அனைத்துத் தகவல்களையும் இந்தத் தளம் சேகரிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651789


(रिलीज़ आईडी: 1651869) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Telugu