சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19: பஞ்சாப் மற்றும் சண்டிகருக்கு மத்திய குழுக்களை அனுப்பியது சுகாதார அமைச்சகம்
Posted On:
06 SEP 2020 11:12AM by PIB Chennai
பஞ்சாப் மாநிலத்துக்கும், சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கும் மத்தியக் குழுக்களை அனுப்ப சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும், கோவிட் நோயாளிகளின் சிறப்பான மருத்துவ மேலாண்மைக்காகவும் கண்காணிப்பு, கட்டுப்பாடு, பரிசோதனை ஆகிய பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசத்திற்கும் இந்த உயர்மட்டக் குழுக்கள் உதவும்.
சரியான நேரத்தில் பரிசோதனை மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் இருக்கும் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு இந்த குழுக்கள் வழிகாட்டும்.
கோவிட் மேலாண்மைக்கான வழிகாட்டல்களை வழங்குவதற்காக பஞ்சாப் மற்றும் சண்டிகரில் இந்த குழுக்கள் 10 நாட்கள் தங்கி இருக்கும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வரும் மத்திய அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த குழுக்கள் அனுப்பப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651728
(Release ID: 1651771)
Visitor Counter : 234