அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய கலப்புத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எளிதில் தூக்கி செல்லக்கூடிய கிருமி நாசினிக் கருவியானது, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் துரிதமாக சுத்தப்படுத்தும்
प्रविष्टि तिथि:
04 SEP 2020 7:20PM by PIB Chennai
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் துரிதமாகவும், எளிதாகவும் சுத்தப்படுத்தி, அவற்றைப் பல முறை உபயோகப்படுத்த உதவும், எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கிருமி நாசினிக் கருவி ஒன்றைப் புதிய கலப்புத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – திருப்பதி (IITT) மற்றும் IISER திருப்பதி ஆகியவை இணைந்து இந்த எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய கிருமி நாசினிக் கருவியை உருவாக்கியுள்ளன.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் இதை பயன்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்தக் கண்டுபிடிப்பைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள, டாக்டர் ரீதேஷ் குமார் கங்க்வார், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - திருப்பதியைத் தொடர்பு கொள்ளவும். ஈ-மெயில்: reetesh@iittp.ac.in, கைபேசி: 8018119014.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651390
***
(रिलीज़ आईडी: 1651536)
आगंतुक पटल : 285