அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தற்போதைய மற்றும் முன்னாள் செயலாளர்கள் இந்தியாவில் மாற்றம் கொண்டுவருவதில் இத்துறையின் முன்னேற்றப்பாதை வரைபடம் குறித்து விவாதம்

Posted On: 02 SEP 2020 5:53PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) முன்னாள் மற்றும் தற்போதைய செயலாளர்கள், இத்துறையின் சார்பில் இதுவரை எட்டியுள்ள மைல்கல் சாதனைகளை எடுத்துரைத்தனர்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இத்துறையின் 50 ஆண்டு பொற்காலங்களை நினைவுகூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடக்க குழு விவாதத்தில் முன்னேறிச் செல்லும்  பாதை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த தொடர் சொற்பொழிவுகள், இத்துறையின், 50 ஆண்டுகள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகும்.. இதனை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஒரு பிரிவான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் தொடர்பு தேசிய கவுன்சில் (என்சிஎஸ்டிசி) மற்றும் விஞ்யான் பிரசார் மெய்நிகர் நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650680

*****



(Release ID: 1651047) Visitor Counter : 132