இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் முயற்சி 20 புதிய தடகள விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணிகள் பெறுவதை உறுதி செய்துள்ளது
प्रविष्टि तिथि:
02 SEP 2020 5:46PM by PIB Chennai
20 புதிய தடகள விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணிகளைப் பெற வகை செய்யும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையை மத்திய அரசின் பணியாளர் பயிற்சித் துறை 2020 செப்டம்பர் 1 ம் தேதி ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசுப் பணிகளில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான ஒதுக்கீட்டு நியமனத்தில் சேர்க்கப்படும்
விளையாட்டுக்கள் பட்டியலில் இருந்த 43 விளையாட்டுக்கள் தற்போது 63 ஆக உயர்த்தப்பட்டு அவற்றில் உள்நாட்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களான மல்லாகம்பம் , கயிறு இழுப்பு, உருளைக் காலணி அணிந்து விளையாடும் ரோல்பால் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
அரசின் இந்த முடிவு குறித்துப் பேசிய மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, "விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த நலனைப் பேணுவதற்கு அரசு முதல் முக்கியத்துவம்
அளித்துவருகிறது: பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைப் பட்டியலில் மேலும் பல விளையாட்டுக்களைச் சேர்த்திருப்பது இந்த வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது, தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் சிறந்து விளங்கும் நமது விளையாட்டு வீரர்கள் ,வீராங்கனைகளிடையே உத்வேகத்தை உயர்த்துவதுடன் நாட்டில் விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு உரிய நேர்மறைச் சூழலை ஏற்படுத்த உதவும்" என்று கூறினார்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650675 என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
**********
(रिलीज़ आईडी: 1651041)
आगंतुक पटल : 270