பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

திரு.தர்மேந்திர பிரதான் யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் -3 வது வருடாந்திர தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார்; தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தில் பங்கெடுக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

Posted On: 02 SEP 2020 8:16PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உருக்குத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் "புதிய சவால்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் அமெரிக்க-இந்திய முக்கிய செயல்திட்ட பங்குதாரர் மன்ற (யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப்-) 3 வது வருடாந்திர தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார்.

உலகப் பொருளாதாரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கோவிட் -19 நோய் தொற்றின் தாக்கம் மற்றும் அதன் விளைவாக எரிசக்தி தேவை சுருக்கம் குறித்து மத்திய அமைச்சர் திரு.பிரதான் உரையாற்றினார். இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் படிப்படியாக அதிகரிப்பதன் மூலம், எரிசக்தி நுகர்வு விரைவில் கோவிட் நோய் தொற்றுக்கு முன்பிருந்த  நிலைகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

தற்சார்பு இந்தியா பிரச்சாரம் குறித்து பேசிய திரு.பிரதான், பிரதமர் திரு.மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட பிரச்சாரம் ஒரு தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க அழைக்கிறது, என்றார். கோவிட் -19 சவால்களை ஒரு வாய்ப்பாக மாற்றவும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியற்றை உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் தொடர்புடன் இணைக்கவும், 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் திரு.பிரதான் எடுத்துரைத்தார், .

மேலும் விவரங்களுக்கு:  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650770

******


(Release ID: 1651021) Visitor Counter : 229