உள்துறை அமைச்சகம்

தொலைநோக்கு பார்வை கொண்ட அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கத்துக்காக பிரதமருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நன்றி

प्रविष्टि तिथि: 02 SEP 2020 7:31PM by PIB Chennai

அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

 

இந்தத் திட்டத்தை வரவேற்று புகழாரம் சூட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த சீர்திருத்தத்திற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

"அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை கர்மயோகி இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் அமைப்பு சார்ந்த திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான முழுமையான மற்றும் விரிவான சீர்திருத்தம் இது," என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.

 

21-ஆம் நூற்றாண்டுக்கான மிகப்பெரிய சீர்திருத்தமான இந்த இயக்கம் புதிய பணி கலாச்சாரத்தை உருவக்கும் என்றும், இலக்கு சார்ந்த தொடர் பயிற்சிகள் அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்து, அதிகாரமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650748 

 

***

MBS/GB


(रिलीज़ आईडी: 1650795) आगंतुक पटल : 317
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada