மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு (II)2019- இறுதி முடிவு

Posted On: 01 SEP 2020 4:48PM by PIB Chennai

இந்திய ராணுவ அகாடமி, டேராடூன், இந்திய கடற்படை  அகாடமி, எழிமலா, கேரளா மற்றும் விமானப்படை அகாடமி, ஐதராபாத் ஆகியவற்றில் 149வது பயிற்சியில் சேர்வதற்காக, மத்திய அரசு தேர்வாணையம்(UPSC) கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வுகள் (Combined Defence Services Examination (II)2019) மற்றும் முப்படைகளுக்கான தேர்வு வாரியம்(SSB) நடத்திய நேர்காணல் அடிப்படையில் இறுதி முடிவுகள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற 196 (106+76+14) பேரின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களின் மதிப்பெண்கள், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA) தேர்வு இறுதி முடிவுகள் வெளியான பின் UPSC இணையதளத்தில் வெளியிடப்படும். 


(Release ID: 1650469)