ரெயில்வே அமைச்சகம்

நெலமங்கலா (பெங்களூரு அருகேயுள்ளது) – பாலே(சோலாப்பூர் அருகேயுள்ளது) இடையேயான தென் மேற்கு ரயில்வேயின் முதலாவது ஆர்.ஓ.ஆர்.ஓ. ரயில் சேவையை கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு.சுரேஷ் சி.அங்கடி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்

Posted On: 30 AUG 2020 12:43PM by PIB Chennai

நெலமங்கலா (பெங்களூரு அருகேயுள்ளது) – பாலே (சோலாப்பூர் அருகேயுள்ளது)  இடையேயான தென் மேற்கு ரயில்வேயின் முதலாவது ஆர்.ஓ.ஆர்.ஓ. (ரோல் ஆன் ரோல் ஆஃப்) எனப்படும், சரக்கு லாரிகள், டிரக்குகளை,  அப்படியே சரக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டு செல்லும் ரயில் சேவையை, கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு.சுரேஷ் சி.அங்கடி ஆகியோர் இன்று (30.08.2020) கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.  

நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா,  “பன்னோக்கு போக்குவரத்து இணைப்பைச் செயல்படுத்த வேண்டுமென நமது மதிப்பிற்குரிய பிரதமர் திரு.நரேந்திரமோடி வலியுறுத்தி வருகிறார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள சந்தைகள் மூலம், ஆர்.ஓ.ஆர்.ஓ. போக்குவரத்திற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன“ என்றார்.  

ரயில்வே இணையமைச்சர் திரு.சுரேஷ் சி.அங்கடி பேசுகையில், “பன்னோக்கு இணைப்பு என்பது நமது பிரதமரின் கணவுத் திட்டம்.  பெங்களூரு – சோலாப்பூர் இடையே ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன.  ஆர்.ஓ.ஆர்.ஓ. ரயில் மூலம் இந்த லாரிகளை 17 மணி நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.  கோவிட் பாதிப்பு காரணமாக, இந்த ரயிலின் சோதனை ஓட்டம் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. கிசான் ரயில் சேவை விவசாயிகளின் விளைபொருள்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல உதவுகிறது“ என்று தெரிவித்தார். 

                                                                      *******

 



(Release ID: 1649807) Visitor Counter : 140