பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஒடிஷா மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய வசதிகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர் திரு ஆர் பி நிஷாங்கு உடன் இணைந்து அடிக்கல் நாட்டினார்.

Posted On: 29 AUG 2020 5:08PM by PIB Chennai

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு எஃகு ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய கல்விமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்குடன் இணைந்து ஒடிசாவில் கோராபுட்டில் உள்ள ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUO) அகடமிக் கட்டிடம், நூலகம், பணியாளர் குடியிருப்பு ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டினார்.

 

ஒடிசாவில் உயர்கல்விக்கான உயரிய மையமாக ஒடிஷா மத்திய பல்கலைக்கழகம் திகழ்கிறது என்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு பிரதான், இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். ஒடிசாவில் உயர்கல்விக்கு அளிக்கப்படும் உத்வேகம் குறித்துப் பேசிய திரு பிரதான், ஒடிசாவில் உயர்கல்விக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வந்துள்ளார் என்று கூறினார். “அவரது தலைமையில் ஐஐஎம், ஐஐடிஐஐஎஸ்இஆர், சி ஐ பி இ டி,  என் ஐ எஸ் இ ஆர்,  ஐசிடி=ஐ ஓ சி எல் (IIM, IIT, IISER, CIPET, NISER, ICT-IOCL) போன்ற பல உயர் கல்வி நிறுவனங்கள் ஒடிசாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் திரு பிரதான் கூறினார்.

 

தேசிய கல்விக் கொள்கை பற்றிப் பேசிய திரு பிரதான், “இந்தப் பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக தொழில்துறை, கல்வித்துறை, அரசு ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட புதிய கல்விக்கொள்கை உதவும். பழங்குடியின பன்முகத் தன்மையில் கோராபுட் சிறந்து விளங்குகிறது. பரவலான அடிப்படையிலும், கற்பனைத்திறன் மிகும் வகையிலும் கவனம் செலுத்தும் புதிய கல்விக் கொள்கை 20\20 வாய்ப்பற்ற மாணவர்களுக்கு மேலும் அதிக வாய்ப்புகள் வழங்க ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு உதவும். ஒடிசாவில் பழங்குடியினர் மற்றும் மனித இயல் பற்றிய ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்புகளை மேம்படுத்த உதவும்” என்றும் அவர் கூறினார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001P2PW.jpg

ஒடிஷா மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும், மாணவர்களும் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வேளாண் ஆராய்ச்சி, தொழில் முனைவோர் மேம்பாடு போன்றவற்றைப் பயன்படுத்தி கோராபுட்டில் விளையும் உலகப் புகழ் வாய்ந்த கோராபுட் இஞ்சி போன்ற வேளாண் பொருள்களுக்கான சிறந்த பெரிய சந்தைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகம் ஒடிசாவையும், இந்தியாவையும்,றிவுப்பாதையில் முன்னேற்றி, சுயசார்பு இந்தியாவின் ஒளிப்ந்தங்களாகத் திகழும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

தேசிய கல்விக்கொள்கை 2020இல் கண்டுள்ளபடி இந்தக் கல்விநிறுவனம், தனது நோக்கங்களிலும். வழிமுறைகளிலும் முன்னேறியுள்ளது குறித்து நான் பெரிதும் மகிழ்கிறேன். அடிப்படை அறிவியல், சமூக அறிவியல் படிப்புகள் போன்றவற்றை அறிமுகம் செய்ததன் மூலம் ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆசிரியர்களின் தரப் பரிமாணம் மேலும் அதிகரிக்கும். ஒடிஷாவில் 12 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவிலான, திறன் வளர்ச்சித் திட்டம் ஒன்றை, பல்கலைக்கழகம் தொடங்கவுள்ளது என்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகப் பணியாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நிகழ்ச்சியில் பேசிய திரு ஆர் பி நிஷாங்க் கூறினார்.


(Release ID: 1649560) Visitor Counter : 152