குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத் தலைவர் பல்வேறு துறைகளில் தாய்மொழியை விரிவாகப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 AUG 2020 3:24PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு இன்று, சொந்த மொழிகள் அல்லது தாய்மொழிகள் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். தாய்மொழியில் கல்வியை வழங்குவது ஒரு குழந்தைக்கு வேறு எந்த மொழியையும் விட பாடங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.
தெலுங்கு மொழி தினத்தை முன்னிட்டு “நமது மொழி, நமது சமூகம் மற்றும் நமது கலாச்சாரம்” என்ற தலைப்பிலான ஓர் இணையக் கருத்தரங்கில் உரையாற்றினார். இந்த நிகழ்வைத் தென்னாப்பிரிக்கா தெலுங்கு சமூகம் (SATC) ஏற்பாடு செய்தது. இந்த இணையக் கருத்தரங்கு மாநாட்டில் தெலுங்கு மொழி வல்லுநர்கள் மற்றும் லண்டன், சிட்னி, கான்பெர்ரா, அபுதாபி, ஸ்காட்லாந்து, ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட உலகம் முழுவதிலுமிருக்கும் தெலுங்கு சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தெலுங்கு மொழியியலாளரும், மொழியை மேம்படுத்துவதில் முன்னோடியுமான திரு. கிடுகு வெங்கட ராம மூர்த்தியின் பிறந்தஆண்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மொழியும் கலாச்சாரமும் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதை திரு. வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
***********
(रिलीज़ आईडी: 1649529)
आगंतुक पटल : 213