அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

STIP 2020 உருவாக்குவதில் மக்கள் பங்கேற்க டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் அழைப்பு


STIP 2020 குறித்து நாடு முழுக்க சிந்தனையாளர்களுடன் தொடர் கலந்துரையாடல் செய்வதற்கான `கலந்துரையாடல் செய்தல்' நிகழ்வை தொடங்கி வைத்தார்

Posted On: 28 AUG 2020 7:32PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமைச் சிந்தனைக் கொள்கை (STIP 2020) உருவாக்குவதில் இந்தியாவில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் பங்கேற்க வேண்டும் என்று அறிவியல் தொழில்நுட்பம், பூமிசார் அறிவியல்கள், சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்த்தன் இன்று அழைப்பு விடுத்தார். தற்சார்பை எட்டுவதற்கு உதவும் வகையில் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், பாரம்பரிய அறிவை ஆராய்ச்சி, மேம்பாட்டுடன் இணைப்பது, தொழிற்சாலை - கல்வித் துறை உறவைப் பலப்படுத்துதல், அரசாங்கத்தில் துறைகளுக்கு இடையில் தொடர்பு நிலைகளை உருவாக்கி சமன்நிலையை ஊக்குவித்தலுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

`கலந்துரையாடல் செய்தல்' என்ற தலைப்பில் STIP 2020 குறித்து இந்தியாவில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடும் வசதியைத் தொடங்கி வைத்த போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். `MyGov முனையத்தில் STIP 2020 பக்கத்தை' அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் `பள்ளிக் குழந்தைகளுக்கான விநாடி வினா பிரபலமாக்கல்' முயற்சியையும் 2020 ஆகஸ்ட் 28 ஆம் தேதி இங்கு நடைபெற்ற காணொளி நிகழ்ச்சியில் அவர் தொடங்கி வைத்தார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001J9FH.jpg

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002PTFZ.jpg

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00459FS.jpg(Release ID: 1649375) Visitor Counter : 266