நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
போஷான்மாஹ் நிகழ்ச்சியைக் கொண்டாட உணவு, பொது வழங்கல் துறை ஏற்பாடு
Posted On:
28 AUG 2020 7:33PM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்யும் `போஷான்மாஹ்' நிகழ்ச்சியைக் கொண்டாடுவது தொடர்பாக உணவு, பொது வழங்கல் துறை செயலாளர், இந்திய உணவுக் கார்ப்பரேசன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், சி.டபிள்யூ.சி. மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றக் கூட்டம் நடைபெற்றது.
போஷான்மாஹ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக உணவு, பொது வழங்கல் துறையின் பிரிவுகள் மூலமாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்துள்ள செயல்பாடுகளைச் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை நடத்துவதன் மூலம் சத்துமிகுந்த உணவுக்கான உத்தரவாதத்தின் நன்மைகள் குறித்து, அந்தப் பிரிவு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
****
(Release ID: 1649369)
Visitor Counter : 241