ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய ஜல்சக்தி அமைச்சரும் நாகலாந்து முதல் அமைச்சரும் ஜல் ஜீவன் இயக்க அமலாக்கம் குறித்து காணொளிக் காட்சி மூலம் மீளாய்வுக் கூட்டம் நடத்தினர்
Posted On:
28 AUG 2020 5:15PM by PIB Chennai
ஜல்சக்தி அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் காணொளிக் காட்சி மூலம் நாகலாந்து முதல் அமைச்சர் திரு நெய்ஃபியூ ரியோவுடன் அந்த மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார். திரு ஷெகாவத் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் அங்கிருந்தவாறே காணொளிக் காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
2024ஆம் ஆண்டுக்குள் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 100 சதவீதம் குடிநீர்க் குழாய் இணைப்பு தருவதற்கு நாகலாந்து திட்டமிட்டுள்ளது.
”100 சதவீதம் எஃப்.ஹெச்.டி.சி மாநிலமாக” மாற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக நாகலாந்து முதலமைச்சருக்கு உறுதி அளித்த மத்திய அமைச்சர் “ஹர் கர் ஜல்” என்ற பிரச்சாரத்தை தொடங்குமாறு அவரை கேட்டுக் கொண்டார். 2024 என்ற காலக்கெடுவுக்கு முன்னரே ஒவ்வொரு கிராமத்திற்கும் 100 சதவீதக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்க வேண்டும் என்ற இலக்கை அடையும் வகையில் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
(Release ID: 1649308)
Visitor Counter : 254