பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு காணொலிக் காட்சி வழியாக பிராந்திய அமர்வுகள் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கிறது
Posted On:
26 AUG 2020 6:01PM by PIB Chennai
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் ( ஏஎஃப்டி ) தலைவர் நீதிபதி திரு. ராஜேந்திர மேனன், இன்று ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் பத்து பிராந்திய அமர்வுகளிலும் காணொலிக் காட்சி வழியாக விசாரணையைத் தொடங்கினார்.
ஜூன் 8, 2020 முதல் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி வரும் ஒரே நீதிமன்றம், ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வாகும். ஆயுதப்படை வீரர்கள் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள வீரர்கள் முதன்மையாக அவர்களது தொலைதூர இருப்பிடங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளால் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் குறைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, வெளிப்படையான விசாரணைகள் முதன்மை அமர்வில் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் தலைவர், அப்பழுக்கற்ற, ஆரோக்கியமான தரத்தை முதன்மை அமர்வில் பராமரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய முதன்மை பதிவாளர் டாக்டர் ராகேஷ் குமாருக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் இல்லாத விசாரணைக்காகப் பாராட்டினார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நீதிமன்ற வளாகங்கள் முழுவதும் தினமும் இரண்டு முறை ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் பணியாளர்களால் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன.
******
(Release ID: 1648932)
Visitor Counter : 203