நிதி அமைச்சகம்

தாமதமாகும் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணம் மீது வட்டி: மத்திய மறைமுக வரிகள் வாரியம்

Posted On: 26 AUG 2020 5:34PM by PIB Chennai

தாமதமாகும் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணம் மீதான வட்டி தொடர்பான 25 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட வெளியீட்டு எண் 63/2020-மத்திய வரி அறிவிக்கை, சில தொழில்நுட்ப வரம்பெல்லைகளின் காரணமாக வருங்காலத்தை மனதில் கொண்டு வெளியிடப்பட்டதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் இன்று தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம், சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் 39-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மத்திய மற்றும் மாநில வரி நிர்வாகங்களால் கடந்த காலத்துக்காக எந்த வசூலும் செய்யப்பட மாட்டாது என்று அது உறுதியளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி குழுவால் முடிவு செய்துள்ளபடி, வரி செலுத்துவோருக்கு முழு நிவாரணத்தை இது உறுதி செய்யும். 

25 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட அறிவிக்கை தொடர்பாக, தாமதமாகும் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணத்தின் நிகர கடன்பாட்டின் (பணமாக வழங்கப்படும் வரி கடன்பாடு) மீது 1 செப்டம்பர், 2020-இல் இருந்து வட்டி வசூலிப்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகளைத் தொடர்ந்து, மத்திய மறைமுக வரிகள் வாரியம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

********



(Release ID: 1648908) Visitor Counter : 310