கலாசாரத்துறை அமைச்சகம்

இந்திய தொல்பொருள் ஆய்வின் 7 புதிய வட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது

Posted On: 26 AUG 2020 6:03PM by PIB Chennai

இந்திய தொல்பொருள் ஆய்வின் 7 புதிய வட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் இன்று ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருச்சி, ராய்கஞ்ச், ராஜ்கோட், ஜபல்பூர், ஜான்சி மற்றும் மீரட் ஆகியவை புதிய வட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். தொல்பொருளியல் துறையில், கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம் சர்வதேச புகழ்பெற்ற இடமாகும், எனவே ஹம்பி மினி வட்டம், முழு வளர்ச்சி அடைந்த வட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். முன்னதாக நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வின் ( ஏ.எஸ்.ஐ) 29  வட்டங்கள் இருந்தன.

திருட்டேல் கூறுகையில், ஆயிரக்கணக்கான கோயில்களும், சோழ மன்னர்களின் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களும் கொண்ட தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் சென்னை வட்டத்துடன், திருச்சி ஒரு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. புனிதத்தைப் பொறுத்தவரை கர்நாடகா ஒரு முக்கியமான மாநிலமாகும் என்று குறிப்பிட்டார்.

*****



(Release ID: 1648906) Visitor Counter : 167