மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

3.75 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் உமங்க் செயலியின் சேவைகளை மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேசிய மின்-ஆளுகை பிரிவு மற்றும் பொது சேவை மைய இந்திய மின்-ஆளுகை சேவைகள் நிறுவனத்துக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 26 AUG 2020 6:58PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியாவின் லட்சியமான 'அதிகாரமளிக்கும் சக்தியை' அடையவும், இந்தியா முழுமைக்கும் டிஜிட்டல் உள்ளடக்கலை செயல்படுத்தவும், 3.75 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் உமங்க் செயலியின் சேவைகளை மக்களுக்கு உதவும் முறையில் கிடைக்கச் செய்ய தேசிய மின்-ஆளுகை பிரிவு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பொது சேவை மைய இந்திய மின்-ஆளுகை சேவைகள் லிமிடெட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது

பொது சேவை மையங்களை நடத்தும் கிராம அளவிலான தொழில் முனைவோர் 140 துறைகளின் சேவைகளை உமாங்க் செயலியின் மூலம் மக்களுக்கு கிடைக்க செய்வார்கள். திறன் பேசிகள் வைத்திருக்காத மற்றும் செயலிகள் சார்ந்த மின் சேவைகளை பயன்படுத்தத் தெரியாத மக்களுக்கு இது உதவும். அரசு சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதை இது கணிசமாக அதிகரிப்பதோடு, கிராம அளவிலான தொழில் முனைவோர் மக்களுக்கு வழங்கும் சேவைகளின் எண்ணிக்கையையும் இது விரிவுபடுத்தும். அவர்களது வருவாயும், நம்பகத்தன்மையும் இதன் மூலம் அதிகரிக்கும். எந்த விதமான கூடுதல் செலவும் இல்லாமல் அனைத்து உமாங்க் சேவைகளும் பொது சேவை மையங்களுக்கு வழங்கப்படுகின்றன, கட்டணம் எதுவும் பெறாமல் தேசிய மின்-ஆளுகை பிரிவு இந்த சேவைகளை பொது சேவை மையங்களுக்கு வழங்குகிறது.

ஆண்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் அனைத்து இணைய பயன்பாட்டு தளங்களில் உமங்க் கைபேசி செயலி கிடைப்பதோடு, KaiOS (ஜியோ திறன்பேசிகளில் கிடைக்கும்) இயங்குதளத்தில் 57 தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் கிடைக்கும்.  97183-97183 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவோ அல்லது   https://web.umang.gov.in/uaw/i/v/ref என்னும் முகவரியில் இருந்தோ செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

*******(Release ID: 1648905) Visitor Counter : 316