சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

டாக்டர் ஹர்ஷ் வர்தன் 35வது தேசிய கண் தானம் தொடர்பான பதினைந்து நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் காணொளிக் காட்சியில் உரையாற்றினார்

Posted On: 25 AUG 2020 8:23PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், 35 வது தேசிய கண் தானம் தொடர்பான பதினைந்து நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றிதுடன், எய்ம்ஸ், புதுதில்லி மற்றும் தேசிய கண் வங்கி ஏற்பாடு செய்த ஊடாடும் இணையக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.

எய்ம்ஸ் (டெல்லி) மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து நடத்திய தேசியப் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வைக் குறைபாடுக் கணக்கெடுப்பு 2019, இந்தியாவில் 50 வயதுக்கு குறைவான நோயாளிகளிடையே பார்வைக் குறைப்பாட்டிற்கு முக்கிய காரணம் கருவிழிக் குறைபாடு (corneal blindness) என்றும். 37.5 சதவீதம் என்றும்  50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுடைய பார்வை குறைப்பாட்டிற்கு அதுவே இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது என்றும் கூறினார், “ருவிழிக் குறைபாடே உலகில் பார்வைக் குறைபாடுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதையும் அவர்  அனைவருக்கும் நினைவூட்டினார்.. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைகள், உலக மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் பேர் கருவிழிக் குறைபாடு நோய்களால் மட்டுமே பார்வையற்றவர்கள் என்று மதிப்பிடுகின்றன. இந்தியாவில், சுமார் 68 லட்சம் பேர் குறைந்தது ஒரு கண்ணில் கருவிழிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்; இவர்களில், 10 லட்சம் பேர் இரு கண்களிலும் பார்வையற்றவர்கள்.”

**********



(Release ID: 1648608) Visitor Counter : 165