நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கான்பூரில் உள்ள தேசிய சர்க்கரைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிர்வாகிகள் மேம்பாட்டுத் திட்டம் துவக்கம்

Posted On: 24 AUG 2020 6:55PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள தேசிய சர்க்கரைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற 5 நாள் இணையவழித் திட்டத்தை உணவு, பொது விநியோகத் துறைச் செயலர் திரு.சுதான்சு பாண்டே இன்று மெய்நிகர் நிகழ்ச்சியாக துவக்கிவைத்தார். இந்தியாவையும், வெளிநாடுகளையும் சேர்ந்த சர்க்கரைத் தொழில் துறைகளின் மூத்த நிர்வாகிகள் சுமார் 100 பேர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கிறார்கள். தனது துவக்க உரையில் உணவு பொது விநியோகத் துறைச் செயலர், உலக அளவில் சர்க்கரை நிலவரம் குறித்தும், பொருளாதாரத்திற்கும்,ந்தைத் தேவைகளுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிப்பு ஆலைகளுக்கான அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். சர்க்கரை ஆலைகளை பயோ எரிசக்திக்கான மூல தளமாக மாற்றுவதன் தேவை குறித்தும் அவர் வலியுறுத்தினார். சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில், இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருள்ளையும்,  சிறப்புத் தன்மை கொண்ட சர்க்கரையையும் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய சர்க்கரைக் கழகத்தைப் பாராட்டிப் பேசிய அவர்,  இது போன்ற மேலும் பல இணையவழித் திட்டங்களை நடத்தி, பணிபுரிபவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, அதன் மூலம் சர்க்கரைத் தொழில்துறை பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் தொடர்ந்து நன்கு பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001RN2Y.jpg



(Release ID: 1648358) Visitor Counter : 144