பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரில் தகவல் அறியும் உரிமை முழுமையாக செயல்பட்டு வருகிறது டாக்டர். ஜிதேந்திரா சிங்

Posted On: 24 AUG 2020 6:26PM by PIB Chennai

பெருந்தொற்று நிலவிய போதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரப்பெற்ற வினாக்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லாமல் பதில்கள் அனுப்பப்பட்டன என்றும், சில காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு விரைவாக பதில்கள் அனுப்பப்பட்டன என்றும், வட கிழக்கு மண்டலப் பகுதி மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகிய துறைகளுக்கான அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மத்திய தகவல் ஆணையர், மாநிலத் தகவல் ஆணையர்கள் ஆகியோர் கொண்ட கூட்டத்தில் பேசிய டாக்டர்.ஜிதேந்திர சிங், 2014 ஆம் ஆண்டு மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஆட்சி அமைப்பின் மாதிரி, மிகுந்த வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாறியது என்று கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் தகவல் ஆணையங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தவும், ஆதாரங்களைப் பெருக்கவும், தேவையான அனைத்து முடிவுகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும், ஆணையத்தில் இருந்த காலியிடங்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிரப்பப்பட்டன என்றும் கூறினார்.

 

.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001RZT8.jpg

 


புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய டாக்டர். ஜிதேந்திர சிங், பெருந்தொற்று காரணமாக, தகவல் அறியும் உரிமை எந்தவித பாதிப்பும் அடையவில்லை என்றும், மார்ச் முதல் ஜூலை 2020 வரையிலான காலத்தில், மத்திய தகவல் ஆணையத்திற்கு வந்த வினாக்கள், ஏறத்தாழ முந்தைய ஆண்டு வரப்பெற்ற வினாக்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவே இருந்தன என்று கூறினார்.

 

ஜூன் 2020 காலத்தில் வினாக்களுக்கு தீர்வு கண்ட விகிதம் ஜூன் 2019 காலத்தை அளவை விட அதிகமாக இருந்தது அதாவது அவற்றுக்கு விரைவில் பதிலளிக்கப்பட்டது இதை எல்லோரும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். எந்த ஒரு விஷயமும் பிரதமர் நரேந்திர மோடி அரசை பின் தங்கி விட செய்துவிட முடியாது என்பதை சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு சக்தியாக இது உள்ளது என்று அவர் கூறினார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002B72E.jpg

 

விலக்கிவிடக் கூடிய தகவல் அறியும் உரிமைகளை விக்குவது குறித்து ஆலோசிக்குமாறு தகவல் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்துத் தகவல்களுமே இன்று பொதுவெளியில் கிடைக்கின்றது என்பதை அவர் வலியுறுத்தினார். மீள் பதிவுகளாக வரும் தகவல் அறியும் உரிமை வினாக்களையும், தவறான வழிகாட்டுதலின் பேரில் வரப்பெறும் தகவல் அறியும் உரிமை வினாக்களையும் விக்குவதால் வினாக்கள் தேங்குவது குறையும் என்றும், பணிச்சுமை குறையும் என்றும், பணித்திறன் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

ஜம்மு காஷ்மீர் லடாக் தொடர்பான விஷயங்கள் குறித்து இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமையும் கீழ் தகவல் பெறலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மறுசீரமைப்பு சட்டம் 2019க்கு முன்னர், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும் என்ற நிலை இருந்தது.


(Release ID: 1648340)