சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

திரு. கட்கரி மேம்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களின் மாதிரிகளில், அதன் எரிபொருளாக உயிர் எரிபொருள், மின்சாரம், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தார்

Posted On: 24 AUG 2020 6:36PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, உயிரி எரிபொருள்கள், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை எரிபொருள் அடிப்படையாகக் கொண்டு பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு இணையக் கருத்தரங்கில் - 4 வது பொது போக்குவரத்து சர்வதேச சங்கத்தின் (UTIP) இந்தியப் பேருந்துக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் (SRTUs) வழக்கமா எரிபொருள்களுக்கு அதிக செலவு செய்கின்றன, அவை விலை உயர்ந்தவை என்று தெரிவித்தார். போக்குவரத்து எரிபொருளாக உயிரி எரிபொருள்கள், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு மாற திரு.கட்கரி அழைப்பு விடுத்தார். இது எரிபொருளுக்காக செலவிடும் தொகையை குறைப்பது மட்டுமல்லாமல் பொருளாதாரம் மற்றும் மாசு குறைப்புக்கும் பங்களிக்கும் என்று அவர் கூறினார். திரு. கட்கரி, கச்சா எண்ணெய் / ஹைட்ரோகார்பன்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது நாடு பெருந்தொகையைச் செலவிடுகிறது, இது குறைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

உயிரி எரிபொருள்கள் / சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான வேலைத் திறனைக் குறிப்பிடுகையில், நாக்பூர் 450 பேருந்துகளை உயிரி எரிபொருளில் இயங்கக் கூடியதாக மாற்றத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 90 பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளன. பஸ் சேவையில் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு சுமார் ரூ .60 கோடி ஆகும், இது பேருந்துகளின் எரிபொருளை சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு மாற்றுவதன் மூலம் சேமிக்க முடியும். கழிவுநீரிலிருந்து சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு.கட்கரி தெரிவித்தார். சிறந்த பொதுப் போக்குவரத்தை வழங்க உதவும் இழப்புகளைக் குறைப்பதற்காக இந்த மாதிரியைப் பின்பற்றுமாறு மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்களை (STRUs) அவர் கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பல நன்மைகளைக் கொண்ட நெல் வைக்கோல் / பார்லி போன்ற சுருக்கப்பட்ட எரிவாயுவின் பிற ஆதாரங்களை விவசாயிகள், ஏற்றுக்கொள்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறந்த பொது போக்குவரத்துக்கு தனியார் மூலதனத்தைப் பயன்படுத்தும், லண்டன் பேருந்து மாதிரியை ஏற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார். பொது தனியார் கூட்டாண்மை (PPP) ஊக்குவிப்பதும் தொடரப்படலாம் என்று தெரிவித்தார். மேலும் கூறுகையில், திரு கட்கரி அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் இரட்டை இணைப்புப் பேருந்துகளை ஏற்றுக்கொள்வது பொதுப் போக்குவரத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என்று அவர் பரிந்துரைத்தார். பேருந்து ஓட்டுநர்கள், நல்ல உதவியாளர்கள் போன்ற சிறந்த சேவைகளை வழங்குவது, ஆடியோ இசை, வீடியோ படங்கள் போன்ற பொழுதுபோக்குக் கருவிகளை வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம், இது சிறந்த வருவாயைப் பெற்றுத் தரலாம் என்று தெரிவித்தார்.

**********(Release ID: 1648339) Visitor Counter : 170